ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தை கடந்தது...சாமானிய மக்கள் அதிர்ச்சி

கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,200 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-03-05 05:14 GMT
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தை கடந்தது...சாமானிய மக்கள் அதிர்ச்சி

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.680 உயர்ந்து ரூ. 48,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,015-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 6,000ஐ கடந்ததால் நகை வாங்கும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,200 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்