ஆட்டோவில் புகையிலை கடத்தியவர் கைது

வாலாஜாவில் ஆட்டோவில் புகையிலை கடத்தியவர் கைதானார்.

Update: 2023-09-24 18:01 GMT

வாலாஜா அணைக்கட்டு ரோடு மேம்பாலம் ஜங்ஷனில் வாலாஜா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் ஆட்டோ ஓட்டிவந்த வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்