காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் காரில் கடத்திய புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் தனிப்படை போலீசார் பைபாஸ் ரோடு, மூப்பன்பட்டி விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த மூட்டைகளில் ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அழகுகுழியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சவுந்தரகுமார் (வயது 34), கோவில்பட்டி அருகே உள்ள சவலாப்பேரி பெருமாள்சாமி மகன் வெள்ளத்துரை ( 32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்த ரூ17 ஆயிரம் மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்