புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திருவாடானை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-29 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் கோட்டை நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தி அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து எஸ்.பி.பட்டினம் மேலத் தெரு அபூபக்கர் சித்திக் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்