புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருவாடானை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவாடானை,
திருவாடானை தாலுகா மங்கலக்குடியில் திருவாடானை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகமது சைபுல் ஹிஷாம் மளிகை கடை ஒன்றில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு அரசு அனுமதி இன்றி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த திருவாடானை போலீசார் இது தொடர்பாக மங்கலக் குடியைச் சேர்ந்த அகமது நசீர் (வயது 60) என்பவரை கைது செய்தனர்.