கரூர் தாந்தோணிமலை பகுதியில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பூங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்ததில், அங்கு புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடையின் உரிமையாளர் அகரமுத்துவை(வயது 47) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.