புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-14 18:30 GMT

தென்னிலை அருகே உள்ள கார்வழியை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக தென்னிலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்னிலை போலீசார் கடையை சோதனை செய்ததில், புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 11 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்