புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-10-01 18:45 GMT

தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடத்தூர் சிப்காட் வளாகத்தில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி அத்திமரப்பட்டி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் மகன் நாராயணன் (வயது 31) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் நாராயணனை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்