புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-06-07 00:59 IST

ஆதனக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெருங்களூர் கடைவீதியில் ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கடைவீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை விற்றதாக பெருங்களூர் தெற்குத்தெருவை சேர்ந்த அகிலன்(வயது 50) மீது ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்