புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உடையார்பாளையம் அருகே சோழங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ்(வயது 45) என்பவர் தனது வீட்டிற்கு பின்புறம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.