புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திசையன்விளையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-22 18:52 GMT

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று உடன்குடி ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது திசையன்விளை- உடன்குடி ரோட்டில் பதிவு எண் இல்லாத மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற விக்னேஷ் (வயது 32) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்