புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சாலியர் தெருவில் உள்ள ஒரு மளிகைக்கடையில் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்டபுகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக மணிகண்டன் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.