ரூ.3 லட்சம் புகையிலைப்பொருட்கள் சிக்கியது

சிவகாசி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

Update: 2023-07-23 19:29 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

வாகன ேசாதனை

சிவகாசி பகுதியில் கடந்த சில வாரங்களாக புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களின் கடத்தலை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு நடத்தி கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள அனுப்பன்குளம் பகுதியில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மொய்தீன் அப்துல்காதர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.3 லட்சம்

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் மற்றும் காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 மூடைகள் இருந்தது.

அதனை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது அதில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பலதரப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

இதனை கடத்தி வந்த வாணியம்பாடியை சேர்ந்த அப்ரார்அகமது (வயது 33), ஷகீல்அகமது (43), பெங்களூரு வால்மீகி நகரை சேர்ந்த லியாகத்பாஷா (33), மைசூரை சேர்ந்த ஹரீஸ் (29), முகமதுஷரீப் (28) ஆகிய 5 பேரை கைது செய்தனர். புகையிலை கடத்தி வந்த 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து அங்கு புகையிலை கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்