தூத்துக்குடியில்புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
தூத்துக்குடியில்புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பால்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மாப்பிள்ளையூரணி தளவாய்புரத்தில், அதே பகுதியை சேர்ந்த இலங்கை ராஜன் மகன் இளையராஜா (வயது 38) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் இளையராஜா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்து இருப்பதும், அவர் புகையிலை பொருட்களை விற்று வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் இளையராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 930 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.