ரெயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தர்மபுரி வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-09-09 17:16 GMT

தர்மபுரி:

தர்மபுரி வழியாக ரெயில்களில் புகையிலை பொருட்கள் கடத்துவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி வழியாக சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 10 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலைப் பொருட்களை கடத்திவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்