புகையிலை பொருட்கள் விற்பனை: திண்டிவனத்தில் கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-08-16 16:32 GMT


திண்டிவனம், 

திண்டிவனம் மேம்பாலம் அருகில் உள்ள பங்க் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்த 40 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த கடைக்கு வருவாய்துறை அலுவலர் சித்தார்த், கிராம நிர்வாக அலுவலர் சூரியராஜன் ஆகியோர் போலீசார் முன்னிலையில் சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக கடையின் உரிமையாளரான திண்டிவனம் கிடங்கல் - 2 பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் தீபக்குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்