மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது
குலசேகரன்பட்டினம் அருகே மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் உடன்குடி பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மொபட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. அந்த மொபட்டில் கடத்தப்பட்ட 31 பாக்கெட்டுகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதை கடத்தியவர் திருச்செந்தூர் அமலிநகர் சக்திவேல் மகன் கணபதி (வயது 43) என்பதும், வியாபாரி என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.