428 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

428 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-19 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், சிலம்புசெல்வன் மறறும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது ரூ.3 லட்சம் மதிப்பிலான 428 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது46) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்