66 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

66 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-10-11 18:00 GMT

இளையான்குடி, 

இளையான்குடி பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஏர்சாத் தலைமையில் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த மரியானந்தம் மகன் தனசாமி (வயது50) என்பவர் கடையில் வைத்திருந்த சுமார் 66 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி தனசாமியை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்