வட்டன்விளை கிராமத்திற்குமேல்நிலை தொட்டியிலிருந்து முறையாக குடிநீர் திறக்க கோரிக்கை

வட்டன்விளை கிராமத்திற்கு மேல்நிலை தொட்டியிலிருந்து முறையாக குடிநீர் திறக்க நடவடிககை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-26 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை கிராம மக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வட்டன்விளை ஊரில் சுமார் 500-க்கு மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடி தண்ணீர் முறையாக வருவதில்லை. மேலும் வீட்டு வரி, குடிதண்ணீர் வரி உள்பட பல்வேறு வரிகளை வசூல் செய்வது பரமன்குறிச்சி ஊராட்சி மன்றம் ஆகும். ஆனால் எங்கள் ஊருக்கு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடி தண்ணீர் மற்றும் பொது குழாய் குடி தண்ணீர் ஆகியவை திறந்து விடும் உரிமையை வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றம் வைத்துள்ளது. அதனால் எங்கள் ஊருக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை.

எங்களது ஊராட்சிக்கு தேவையான தண்ணீர் முழுவதும் பூர்த்தி செய்த பின்பு தான், மற்ற ஊராட்சிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கூறுகின்றனர். வரி வசூல் செய்வது பரமன்குறிச்சி ஊராட்சி. ஆனால் தண்ணீர் தரக்கூடியது மட்டும் வெள்ளாளன்விளை ஊராட்சி. வட்டன்விளைக்கு பரமன்குறிச்சி ஊராட்சியில் இருந்து நேரடியாக தண்ணீர் வரும் வரை இனி எந்த வரியும் செலுத்த மாட்டோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்