கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்குவைகோ மாலை அணிவித்து மரியாதை

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2023-10-16 18:45 GMT

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 224-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அவரது நினைவு ஸ்தூபி மற்றும் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், "வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் என்றென்றைக்கும் ஓங்கி ஒலித்து இருக்கும். எல்லா சமூக மக்களையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் பரவுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிட முடியாதது, தீர்ப்புகள் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பது கொடுமை என்று வைரமுத்து கூறிய கருத்தை நான் ஆதரிக்கிறேன்" என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெருமாள், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாண்டியன், நகர செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்