வீரமாகாளியம்மன் கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

வீரமாகாளியம்மன் கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-02-21 19:00 GMT

கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கல்லணை கால்வாய் கரையில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கிராமத்தினர் தங்கள் வீடுகளில் நவதானிய விதை தூவி வளர்த்து வைத்திருந்த முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மார்ச் 1-ந் தேதி மது எடுப்புத் திருவிழா நடக்க உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்