மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு திமுக எம்.பி. டி.ஆர். பாலு கடிதம்..!

அகில இந்திய வானொலியை 'ஆகாஷ்வாணி' என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2023-05-07 08:28 GMT

சென்னை,

அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்று தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய வானொலியை ஆகாஷ்வாணி என்று பயன்படுத்தும் உத்தரவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் சிங் தாகூருக்கும். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) என்ற பயன்பாட்டிற்குப் பதிலாக 'ஆகாஷ்வாணி' எனக் குறிப்பிடுமாறு வானொலி நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதற்குப் பதிலாகத் தொடர்ந்து 'அகில இந்திய வானொலி' என்றே பயன்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்