தேனி மாவட்டத்திற்கு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நாளை வருகை

தேனி மாவட்டத்திற்கு சட்டமன்ற பேரவை மதி்ப்பீட்டு குழுவினர் நாளை வருகை தருகின்றனர்.

Update: 2022-10-29 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்திற்கு நாளை (திங்கட்கிழமை) சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் வருகை தருகின்றனர். இந்த குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆய்வுப்பணி மற்றும் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கால வரையறை, அந்த திட்டங்களின் பயன், தற்போதைய நிலை போன்றவை குறித்து அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை காலை 10 மணியளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் ஆய்வு பயணமும் மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்