போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு; 2 பேர் கைது

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-16 19:48 GMT

மானூர்:

நெல்லையில் இருந்து சென்ற அரசு பஸ்சில் சம்பவத்தன்று 2 நபர்கள் மதுபோதையில் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கண்டக்டர், ராமையன்பட்டி போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசாரிடம் முறையிட்டார். இதையடுத்து அவர்கள் அந்த 2 பேரிடமும் விசாரித்தபோது, அவர்களிடம் தகராறு செய்து உள்ளனர். போலீஸ் விசாரணையில், தகராறில் ஈடுபட்டவர்கள் பழைய பேட்டையைச் சேர்ந்த கணேசன் (வயது 33), வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்த சுபாஷ் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசன், சுபாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்