நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை அபேஸ்

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை அபேஸ் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-02-09 16:08 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை அபேஸ் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூதாட்டி

குமரி மாவட்டத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளை குறிவைத்து நகை பறிப்பு மற்றும் பணம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் வடசேரி புத்தேரியில் இருந்து அண்ணா பஸ் நிலையம் நோக்கி நேற்றுமுன்தினம் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அதில் நாகர்கோவில் புத்தேரி கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஜக்கம்மாள் (வயது 64) என்பவரும் பயணம் செய்தார். அந்த பஸ் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்ததும் நின்றது.

நகை அபேஸ்

அதில் இருந்து ஜக்கம்மாள் கீழே இறங்கினார். அப்போது அவர் பையை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதனால் ஜக்கம்மாள் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

ஜக்கம்மாள் பஸ்சில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் ஜக்கம்மாள் பையில் வைத்து இருந்த 10 பவுன் நகையை அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் மூதாட்டிடம் 10 பவுன் நகை அபேஸ் செய்த சம்பவம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

--

Tags:    

மேலும் செய்திகள்