நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
ஏரலில் நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
ஏரல்:
ஏரல் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. இந்த இயக்கத்துக்கு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏராளமான பொதுமக்களிடம் அவர்கள் கையெழுத்து பெற்றனர். இதில் மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், ஒன்றிய தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.