மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்

சாயர்புரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-01 13:20 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள புளியநகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 30). இவர் தனது தந்தை வீடு உள்ள புதுக்கோட்டையில் இருந்து மொபட்டில் பள்ளியில் படிக்கும் தனது மகளுக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு கொண்டு சென்றார். அப்போது அந்த வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ரேவதியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர், சிவகளை நாடார் தெருவை சேர்ந்த முத்துநாடார் மகன் ஐயப்பன் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா கைது செய்தார். அவரிடம் இருந்த 7½ பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. பின்பு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட ஐயப்பன் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்