குன்னூர் விபத்தில் பலியான 7 பேர் குடும்பங்களுக்குதலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி

குன்னூரில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியான 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2023-10-06 19:57 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது, குன்னூர் பகுதியில் பஸ் கவிழ்ந்த விபத்தில் கடையம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி, கடையம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முன்னதாக விபத்தில் இறந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் லாவண்யா, தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஷேக் தாவூது, கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரவிசங்கர், சீனித்துரை, சுரேஷ், பேரூர் செயலாளர், லட்சுமணன், பஞ்சாயத்து தலைவர்கள் தென்காசி பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், கீழக்கடையம் பூமிநாத், தென்காசி யூனியன் துணை தலைவர் கனகராஜ் முத்துபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பில் பஞ்சாயத்து தலைவர் டி.கே.பாண்டியன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், அமைச்சரிடம் மனு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்