சூரியகாந்தி பயிர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
சூரியகாந்தி பயிர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
சூரியகாந்தி பயிர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூரியகாந்தி பயிர்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், சின்னகல்லப்பாடி, ெபரிய கல்லப்பபாடி, போந்தை, பெருங்கொளத்தூர், தானிப்பாடி, வலசை மற்றும் மாவட்டம் முழுவதும் விவசாய சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களையும், காய்கறி பயிர்களையும் அதிகளவில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலை அடிவாரப் பகுதிகள் மட்டுமல்லாமல் தென்பெண்ணை ஆற்று கரையோர பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.
தற்போது கடந்த 50 நாட்களுக்கு முன்பு பயிரிட்ட சூரியகாந்தி பயிர்கள் தற்போது நன்கு செழித்து வளர்ந்து காணப்படுகிறது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் சூரியகாந்தி பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இப்பகுதிகளில் பெரும்பாலும் தண்ணீர் போதுமான அளவு இருப்பதால் அதனை பயன்படுத்தியும், கிணற்றில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தியும் சூரியகாந்தி பயிரிட்டு அதனை பராமரித்து வருகிறோம்.
மானியம் வழங்குவதில்லை
இந்த நிலையில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு பயிரிட்ட சூரியகாந்தி பயிர்கள் வளர்ந்து பூத்துள்ளது. ஆனால் எதிர்பாராத வகையில் கோடை மழை பெய்து வருவதால் விதைகள் குறைந்த அளவே வருகிறது.
மேலும் விதைகளை அதிக அளவில் பறவைகள் தின்று விடுகிறது. இதனால் பல ஆயிரம் செலவு செய்து பயிரிட்ட போதும் லாபம் கிடைக்கவில்லை.
சூரியகாந்தி பயிர் இடுவதற்கு போதுமான மானியம் வழங்கப்படுவதில்லை. எனவே சூரியகாந்தி பயிர்களுக்கு வேளாண்மை துறை சார்பில் மானிய விலையில் விதைகள் மற்றும் மருந்துகள், உரம் உள்ளிட்டவைகளை வழங்கினால் இந்தப் பயிரை அதிகளவில் பயிரிடுவதற்கு நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.