சமூக நீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-27 18:45 GMT


சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

பெரியார் விருது

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இந்த விருது பெறுபவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்வார். 2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

சாதனைகள்

சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு செய்த சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். விண்ணப்பத்தில் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

சமூக சீர்திருத்த கொள்ளை

பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய், தந்தை மற்றும் குடும்பவிவரம், தற்போதைய முகவரி (தொலைபேசிஎண்ணுடன்) கல்வித்தகுதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை குறித்து சிறு குறிப்பு, கலை, இலக்கியம், சமூகபணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறுகுறிப்பு, பிறவிவரங்கள் இருப்பின்ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்