மக்களுக்கு கரும்பு, தேங்காய் வழங்கக்கோரிபா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. விவசாய அணி சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜ.க. விவசாய அணி சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன், திட்ட பொறுப்பாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு, தேங்காய், வெல்லம் வழங்கக்கோரியும், அதை வழங்குவது தொடர்பாக எதுவும் அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.