விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கக்கோரிபா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்;சித்தோடு நால்ரோட்டில் நடந்தது

சித்தோடு நால்ரோட்டில் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-01-05 22:14 GMT

பவானி

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச விலை உயர்வு திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் தாய்ப்பாலுக்கு இணையான சக்தி உள்ள தேங்காய் பால் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்திலும் நடந்தது.

பவானி அருகே உள்ள சித்தோடு நால்ரோட்டில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 பெண்கள் உட்பட மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்