நாச வேலைகளை தடுப்பதற்காக பெரியகுளத்தில் வெடிகுண்டு சோதனை

நாச வேலைகளை தடுப்பதற்காக பெரியகுளத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது

Update: 2022-07-10 15:52 GMT

பக்ரீத் பண்டிகையையொட்டி நாச வேலைகளை தடுப்பதற்காக தேனி மாவட்டத்தில் நாச வேலை தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சென்றாய பெருமாள் தலைமையில் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி பெரியகுளத்தில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பழைய பஸ் நிலையம், மசூதி பகுதி, சோத்துப்பாறை அணை, வைகை அணை, தேனி புதிய பஸ் நிலையம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கொண்டு வரும் உடைமைகளை வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்