திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்: போடி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

போடி நகராட்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது;

Update: 2022-10-01 16:53 GMT

போடி நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் பிரபாகரன்:- திருட்டு சம்பவங்களை தடுக்க 33 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து வார்டுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தலைவர்: இந்த கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் தனலட்சுமி:- நகராட்சியின் வரவு, செலவு மற்றும் நிதி நிலை எப்படி உள்ளது.

தலைவர்:- விரைவில் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்