ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்

ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-30 17:45 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே ெரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் அடியில் செல்லும் சாலையில் கழிவுநீரும், மழை நீரும் தேங்குகிறது. தினமும் அந்த வழியாக கலெக்டர் தனது பங்களாவுக்கு செல்கிறார். மேலும் புதுப்பேட்டை, நாட்டறம்பள்ளிக்கு செல்லும் பொதுமக்கள், அங்கிருந்து திருப்பத்தூருக்கு வரும் பொதுமக்கள் அந்தச் சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். தினமும் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனினும் அங்கு தினமும் தண்ணீர் குளம்போல் தேங்குகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்