மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கம்பத்தில் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் தங்க விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிபி (வயது 20). இவர் கோம்பை ரோடு தெருவில் மோட்டார்சைக்கிளில் சத்தம் எழுப்பியவாறு வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (28) என்பவர் தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சிபி, ராஜாவை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ராஜா காயமடைந்தார். இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிந்து சிபியை கைது செய்தனர்.