அரசூர் பூச்சிக்காடு ஜெயந்திநாதர் மரைன் கல்லூரிக்குபுகையிலை இல்லாத கல்வி நிறுவன தகுதி சான்றிதழ்

அரசூர் பூச்சிக்காடு ஜெயந்திநாதர் மரைன் கல்லூரிக்கு புகையிலை இல்லாத கல்வி நிறுவன தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-02-15 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து மதிப்பீடு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக அரசூர் பூச்சிக்காடு ஜெயந்திநாதர் மரைன் கல்லூரி புகையிலை இல்லா கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி, பொது சுகாதார பணிகளின் இயக்குனர் மற்றும் தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் ஆகியோரின் ஒப்புதல் தகுதிச் சான்றிதழை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரஹாம், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் ஜெயந்திநாதர் மரைன் கல்லூரிக்கு வழங்கினர். தகுதி சான்றிதழை கல்லூரி செயலாளர் ராஜேஷ் சார்பில் மக்கள் தொடர்பு அலுவலர் பிரின்ஸ் பெற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்