பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்;
தேனி,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் அரசுபாண்டி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் நளச்சக்கரவர்த்தி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் விஜயா, மாவட்ட மாணவரணி செயலாளர் சிவபார்வதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். காமராஜர் பிறந்தநாள் அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.