கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: 12-ந்தேதி கடைசி நாள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

சமூக நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சிறந்த முறையில் பணியாற்றிய நபர்களுக்கு கபீர் புரஸ்கார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான விருது பெற தேனி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள், பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in என்பதில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த 3 விண்ணப்ப படிவங்களை வருகிற 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்