டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தேர்வு எழுதிய 15 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிகளை வெளியிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டு ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடந்தது. ஆனால் தேர்வு நடந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது தேர்வு எழுதிய 15 லட்சம் இளைஞர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
அதேபோல், தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. எதற்காக இந்த தாமதம் என்பதை தி.மு.க. அரசு விளக்க வேண்டும். தேர்வு எழுதிய 15 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.