டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 2,950 பேர் எழுதினர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 2,950 பேர் எழுதினர் 1,673 பேர் தேர்வு எழுத வரவில்லை

Update: 2022-11-19 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-1 தேர்வு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி.மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்பட 16 மையங்களில் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத மாவட்டம் முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்து 623 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,950 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 1,673 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வுகளை கண்காணிக்கும் வகையில் 2 பறக்கும்படை, 5 நபர்கள் கொண்ட 3 சுற்று குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணிகளிலும், 50 போலீசார் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நோில் ஆய்வு செய்தார். தொடர்ந்து தேர்வு மையத்தில் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு, நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்