தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 771- ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 771- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-06-22 13:51 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று தினசரி தொற்று பாதிப்பு 737 ஆக பதிவான நிலையில், இன்று கொரோனா பாதிப்பு 771 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,678- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 459- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 345- ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 126- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்