தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோன பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.;

Update: 2022-06-25 13:52 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359- ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 617- பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 24,981- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 607 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,677- ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்