தமிழகத்தில் மேலும் 2,671- பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 2,722- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

Update: 2022-07-09 15:04 GMT

சென்னை,

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,722-ல் இருந்து 2,671- ஆக குறைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு 939-ல் இருந்து 844- ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,842- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,516- ஆக உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 465 பேருக்கும், திருவள்ளூர் -161, கோவை -118, நெல்லை -112, தூத்துக்குடி -64, காஞ்சிபுரம் -80, சேலம்-61, கன்னியாகுமரி -60, திருச்சி- 58, ராணிப்பேட்டை -39, விழுப்புரம் -38 - பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்