தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,600-ஐ கடந்தது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.;

Update: 2022-07-03 14:09 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 2,533 ஆக பதிவாகியிருந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று 1,487- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1025-ல் இருந்து 1072- ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்