தமிழ்நாட்டில் இன்று 10 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

Update: 2023-02-20 15:21 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 2 பேருக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

30 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்