தமிழகத்தில் மேலும் 627 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 627 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 94 பேர், கோவையில் 81 பேர், செங்கல்பட்டில் 49 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 19 மாவட்டங்களில் பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக உள்ளது.
மேலும், 12 வயதுக்குட்பட்ட 53 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 92 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 408 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 6 ஆயிரத்து 87 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.