மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்றார். அங்கு மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளையும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். திருவிக நகர், பெரம்பூர், பாடி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு பணியின் போது அமைச்சர்கள் சேகர்பாபு , துரைமுருகன், கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.