தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா மத்திய மந்திரி டி.ஆர். பாலுவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.